Thursday 24 September 2015

இரண்டு கவிதைகள்


கடந்தபடியிருக்கிறாள்
இந்த தூரத்தை
அவள் நம்பிய கடவுள்களுக்கு வேறு பணிகள் இருக்கின்றன
ஊசி முனை தவங்கள்
பொய்த்த போதும்
வரங்களில் வேண்டிக்கொள்கிறாள்
தன் இனத்திற்கும்
காப்பாற்றியபடியிருக்கும் யாவற்றிற்குமாக
வறண்ட தேசத்திற்கு
முடி சூடியவனுக்காக
துவங்குகிறாள்
மறுபடியும்
ஒற்றைக் கால் தவத்துடன்
தன நீள் பயணத்தை
🌹🌹
வைராக்கியம் பொதிந்த
தன் பேழையை
பரம்பரை மூதாதையிடம்
கையளித்துவிட்டு
ஏதும் உறுத்தலில்லாதது போல்
கை கோர்க்கிறாள்
முன்னால் நகரும்
தன் முகவரி ஒன்றோடு
-அம்சப்ரியா

1 comment:

  1. வணக்கம்.வலைப்பதிவர் சந்திப்புத்திருவிழாவிற்கு விழாக்குழு சார்பாக உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.நன்றி.

    ReplyDelete